2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

கொழும்பு துறைமுகத்தில் சுங்க அதிகாரிகள் பகிஷ்கரிப்பு

Super User   / 2010 ஒக்டோபர் 26 , மு.ப. 08:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுபுன் டயஸ்)

கொழும்பு துறைமுகத்தில் சுங்க அதிகாரிகள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். சைத்திய வீதிக்கூடாக துறைமுகத்திற்குள் செல்வதற்கு கடற்படையினரின் அனுமதி பெறவேண்டும் என சுங்க அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டதையடுத்தே அவர்கள் துறைமுகத்தின் முதலாம்இலக்க நுழைவாயிலில் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

"பல வருடங்களாக சுங்கத்திணைக்களத்தில் பணியாற்றும் நாம் எதற்காக இந்த அனுமதியைப் பெற வேண்டும்? எமக்கு அனுமதி கிடைக்கும் வரை நாம் பகிஷ்கரிப்பை தொடருவோம்" என சிரேஷ்ட சுங்க அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக கடற்படைப் பேச்சாளர் கப்டன் அதுல செனரத் கூறுகையில் 'முதலாம் இலக்க வாயிலுக்கூடாக துறைமுகத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட வேண்டியவர்கள் குறித்து, இலங்கைத் துறைமுக அதிகாரசபையின் தலைவரினாலும் சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தினாலும் கடற்படைக்கு அனுப்பப்பட்ட பெயர்பட்டியலொன்று உள்ளது. அந்த நுழைவாயில் உயர் பாதுகாப்பு வலயப் பகுதியில் உள்ளதால் மேற்படி பட்டியலில் உள்ளவர்களை மாத்திரமே நாம் அனுமதிக்கிறோம்' எனக் கூறியுள்ளார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--