2020 நவம்பர் 30, திங்கட்கிழமை

நஷ்டத்திற்குள்ளான அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு அழைப்பாணை

Super User   / 2010 ஒக்டோபர் 26 , பி.ப. 03:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சந்துன் ஏ. ஜயசேகர)

அரசாங்கத்திற்குச் சொந்தமான வர்த்தக நிறுவனங்கள் நட்டத்தில் இயங்கியமை தொடர்பாக குறித்த நிறுவனங்களின் தற்போதைய மற்றும் முன்னாள் தலைவர்கள் பொதுநிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்றக் குழுவின் (கோப்) முன்னிலையில் அழைக்கப்பட்டு விளக்கமளிக்கக் கோரப்படுவர் என கோப் தலைவரும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டியூ குணசேகர தெரிவித்துள்ளார்.

பெரும் எண்ணிக்கையான அரச நிறுவனங்கள் நிதி மற்றும் நிர்வாக ரீதியான முறைகேடுகளால் பில்லியன் கணக்கான நஷ்டமடைந்தமை கரிசனைக்குரிய விடயம் என அமைச்சர் டியூ குணசேகர  டெய்லி மிரருக்குத் தெரிவித்தார்.

இந்நிறுவனங்கள் திறைச்சேரியிலிருந்து நிதியைப் பெறுவதால் நாட்டின் பொருளாதாரத்திற்கும் பாதிப்பு ஏற்படுவதாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .