2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

இடம்பெயர்தோருக்கான வாக்களர் பதிவு கால எல்லை நீடிப்பு

Super User   / 2010 ஒக்டோபர் 27 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கெலும் பண்டார)

மீளக்குடியேற்றும் செயற்பாடுகள் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதால் இடம்பெயர்ந்தவர்களை வாக்காளராக பதிவு செய்வதற்கான கால அவகாசத்தை தேர்தல் திணைக்களம் நவம்பர் இறுதிவரை நீடித்துள்ளது என தேர்தல் ஆணையாளர் அலுவலக அதிகாரியொருவர் தெரிவித்தார்.

ஆயினும் நாட்டின்  மற்றைய பகுதிகளில் வாக்களர் பெயரெடுப்பு முடிந்து விட்டது. இப்போது திணைக்களம் பெற்ற தகவல்களைஅடிப்படையாகக் கொண்டு வாக்களர் பட்டியலை தயாரித்து வருகின்றது.

உள்ளூர் அதிகாரிகள் பெயர்களை பதிய தவறியிருப்பின் பாதிக்கப்பட்டவர் எமக்கு அறிவிக்கலாம் என பிரதி தேர்தல்
ஆணையார் மஹிந்த தேசபிரிய கூறினார்.

நவம்பரில் மாதத்திற்கு முன்னர் தேர்தல் உத்தியோகத்தர்கள் வடக்கின் வாக்களர் பதிவு நடவடிக்கையை  முடித்து விட வேண்டும்
என வவுனியா உதவி தேர்தல் ஆணையாளர் எஸ் சுதகரன் கூறினார்.

டிசெம்பரில் வாக்களர் பதிவில் ஏதாவது பிழைகள் காணப்படின் முறைப்பாடு செய்யலாம் என அவர் கூறினார்.

வவுனியா, மன்னாரில் வாக்களர் பதிவு வேலைகள் முடிந்து விட்டன. புதுக்குடியிருப்பில் இன்னும் மீள் குடியேற்றம் நடைபெறவில்லை.இடம்பெயர்ந்தோர் தங்கியிருக்கும் முகாம்களில் வாக்களர் பதிவு வேலைகள் அடுத்த வாரம் ஆரம்பமாகவிருக்கும் என்றார் அவர்.

இறுதி வாக்களர் இடாப்பு கிராம சேவை உத்தியோகத்தர் அலுவலகத்திலும், பிரதேச செயலகத்திலும் காட்சிக்கு வைக்கப்படும் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

வெளிநாட்டில் வதியும் யாழ் மாவட்ட மக்களின் பெயர்கள் வாக்களர் இடாப்பிலிருந்து நீக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X