2025 ஜூலை 03, வியாழக்கிழமை

எல்.ரீ.ரீ.ஈயினரும் இலங்கையர்களே: மேல்நீதிமன்ற நீதிபதி

Super User   / 2010 ஒக்டோபர் 27 , பி.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சுசித ஆர்.பெர்னாண்டோ)

1999ஆம் ஆண்டு கொழும்பு நகரசபை மைதானத்தில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் இறுதிக் கூட்டத்தின் போது முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை கொலை செய்ய முயன்றதை ஒப்புக்கொண்ட நபருக்கு 30 வருட கடுழீய சிறைத்தண்டனையை  கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விதித்தார்.

அத்துடன் எல்.ரி.ரி.ஈ.அங்கத்தவர்களும் இலங்கை பிரஜைகளே என்றார். குற்றஞ்சாட்டப்பட்ட சத்தியவேல் இளங்கேஸ்வரன் தன்மீது சுமத்தப்பட்ட28 குற்றங்களையும் ஒப்புக் கொண்டார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவை கொலை செய்ய சதி செய்யதமை, கொலை செய்ய முயன்ற ரி.யோகலிங்கம் அல்லது மணிமேகலாவுக்கு ஒத்தாசை வழங்கியமை ஆகிய இரண்டு குற்றங்களுக்குமாக இவருக்கு 30 வருட கடுங்காவல் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.

மேலும் 26 பேரை கொலை செய்தமைக்காக ஒவ்வொரு கொலைக்கும் 10 வருடங்கள் வீதம் மொத்தம் 260 வருட கடுங்காவல் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.

ஒரே சமயத்தில் இந்த சிறைத் தண்டனையை அநுபவிக்க அனுமதிக்கப்பட்டமையில் இவர் மொத்தமாக 30 வருட சிறைத்தண்டனை அனுபவிப்பார்.

இந்நாட்டின் சட்டங்களின் படி எவரும் ஒருவரின் உயிரை பறிக்க முடியாது. எல்.ரீ.ரீ.ஈ ஒரு பயங்கரவாத அமைப்பு. அது இந்நாட்டின் பிரஜைகளை அங்கத்தவர்களாகா கொண்டிருந்தது. அவர்கள் இலங்கை சட்டத்தின் கீழ் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது என டப்ளியூ.ரி.எம்.பி.பீ.வராவெவ கூறினார்.
 
 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .