2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

ரிஸானாவின் விடுதலையை வேண்டி முஸ்லிம்கள் விஷேட தொழுகை

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 31 , மு.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கைப் பணிப்பெண் ரிஸானாவுக்காக பள்ளிவாசல்களில் விஷேட தொழுகைகளைச் செய்ய முஸ்லிம் சமூகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ரிஸானாவை மரண தண்டனையிலிருந்து காப்பாற்றுவதற்காக அல்லாஹவை வேண்டி நடத்தப்படவுள்ள இந்த விஷேட தொழுகை நிகழ்வில் சுமார் 1.5 மில்லியன் முஸ்லிம் மக்கள் கலந்துகொள்ள எதிர்ப்பார்ப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து அரபு நியூஸ் செய்திச் சேவைக்கு கருத்து தெரிவித்துள்ள மேல் மாகாண ஆளுனர் அலவி மௌலானா, உலக வாழ் அனைத்து முஸ்லிம்களும் ரிஸானாவின் விடுதலையை வேண்டி தொழுகையில் ஈடுபடப் போவதாக தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .