2020 நவம்பர் 27, வெள்ளிக்கிழமை

ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய மாகாண, வலய கல்வி பணிப்பாளர்களுக்கு அதிகாரம் இல்லை - கல்வி அமைச்சின் செயல

Menaka Mookandi   / 2010 நவம்பர் 01 , மு.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)

தேசிய பாடசாலை ஆசிரியர்களை மாகாணப் பாடசாலைகளுகோ, மாகாண பாடசாலை ஆசிரியர்களை தேசியப் பாடசாலைகளுக்கோ இடமாற்றம் செய்யும் அதிகாரம் மாகாணகல்விப் பணிப்பாளருக்கோ, வலயக்கல்வி பணிப்பாளருக்கோ வழங்கப்படவில்லையென கல்வி அமைச்சின் செயலாளர் சுனில்.எஸ்.சிறிசேன தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக மாகாணப் பாடசாலை ஆசிரியர்கள் தேசிய பாடசாலைகளுக்கும் தேசிய பாடசாலை ஆசிரியர்கள் மாகாண பாடசாலைகளுக்கும் சில மாகாண, வலய கல்லவிப் பணிப்பாளர்களால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவ்விடயம் கல்வி அமைச்சின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதையடுத்து இது தொடர்பான சுற்றரிக்கை வெயிடப்பட்டுள்ளது.

இவ்வாறான இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பின் அவற்றை இரத்து செய்யுமாறு அவர் கேட்கப்பட்டுள்ளார். ஆசிரியர் இடமாற்றம் தொடர்பான சகல நடவடிக்கைகளையும் டிசம்பர் 31 ஆம் திகதிவரை  இடை நிறுத்திவைக்குமாறும் மூன்றாம் தவணை காலத்தினுள் இடாமாற்றங்கள் மேற்கொள்ளப்படக்கூடாது எனவும் அறிவித்துள்ளார்.

இதேவேளை நாட்டிலுள்ள 326 தேசிய பாடசாலை நடவடிக்கைகளை மேற்பார்வை செய்வதற்கென கல்வி அமைச்சின் 20 கல்விப்பணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் நாடளாவிய ரீதியில் உள்ள அரச பாடசாலைகளுக்கான நீரிவிநியோக கட்டணத்தை சலுகை அடிப்படையில் அறவிடுவதில்லையென தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தீர்மாணித்துள்ளது.

இது தொடார்பாக கல்வி அமைச்சிற்கும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபைக்கும் இடையில் நடைபெற்ற பேச்சு வார்த்தைகளில் இதற்கான முடிவு எட்டப்பட்டுள்ளது இதற்கமைய பாடசாலைகளின் நீர்க் கட்டணங்கள் செலுத்தத் தேவையில்லையென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--