2020 நவம்பர் 28, சனிக்கிழமை

சூதாட்ட வரி சட்டமூலத்தில் திருத்தம் கோருகிறது ஹெல உறுமய

Super User   / 2010 நவம்பர் 04 , பி.ப. 01:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கெலும் பண்டார)

சூதாட்ட வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலத்தில் தாம் சமர்ப்பிக்கும் திருத்தங்கள் உள்ளடக்கப்படாவிட்டால், அச்சட்டமூலத்திற்கு எதிராக தாம் வாக்களிக்கக்கூடும் என ஜாதிக ஹெல உறுமய இன்று தெரிவித்துள்ளது.

உத்தேச திருத்தச் சட்டமூலத்தில் பல சாதகமான விடயங்களும் பாதகமான விடயங்களும் காணப்படுவதாக வண. அதுரலிய ரதன தேரர் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாடொன்றில் தெரிவித்தார்.

'நாட்டில் குறிப்பிட்ட இடங்களில் மாத்திரம் சூதாட்ட நிலையங்கள் செயற்படும் வகையில் சூதாட்ட நிலையங்களை இச்சட்டமூலத்தினூடாக அரசாங்கம் ஒழுங்குபடுத்துவதற்கு அரசாங்கம் எதிர்பார்க்கிறது. இது சாதகமான விடயம். ஆனால், ஏதாவதொரு வகையில் சூதாட்டம் சட்டபூர்வமாக்கப்படுவதாகத் தென்படுகிறது' என அதுரெலிய ரதன தேரர் கூறினார்.
 


  Comments - 0

 • jeyarajah Friday, 05 November 2010 10:18 PM

  புத்தம் சரணம் கச்சாமி. புத்த பிக்குமாரும் சூதாடலம் என்ற சரத்தையும் அத்தோடு சேர்த்தால் உங்களுக்கு சௌவ்கரியமாக இருக்கும். சூதாடுவதே தவறு ,அதற்கொரு சட்டம் ,பௌத்தம் அதற்கொரு திருத்தம்.

  Reply : 0       0

  xlntgson Monday, 08 November 2010 09:07 PM

  jeyarajah, இம்மாதிரியான கருத்துகளை வெளியிடாதீர்கள்,
  இது ஆரோக்கியமான கருத்தல்ல,
  இனவாதத்தை தூண்டுவது போன்றதாகும்,
  நீங்கள் கற்பனை செய்து கொள்ளவேண்டும்: ஒரு புத்ததுறவி ஒருவரோடு நேரில் பேசுவது போல,
  நாம் அகௌரவமான சொற்பிரயோகம் செய்தால் கருத்து சொல்வதில் பொருள் இல்லாமல் போய்விடும்!
  ஆங்கிலப் பகுதியில் நான் மிக கௌரவமாக கருத்துச் சொல்லியும் துரோகி என்றும் துவேஷக்காரன் என்றும் ஏச்சு வாங்கினவன், அதேநேரத்தில் அவர்களை நான் கண்டிக்காமல் விட்டதும் இல்லை!
  நல்ல கேள்விகளை கேட்காமல் நம்மை தடுப்பதே அவர்களது எண்ணம்.

  Reply : 0       0

  xlntgson Wednesday, 10 November 2010 08:47 PM

  சகோதர சிங்கள இதழில் நல்ல கேலிச்சித்திரம்
  கணவன் மனைவி பேசிக்கொள்வது போல், கணவன் படித்தவன் நாளேட்டை பார்த்து வாசித்து சொல்கின்றான் மனைவிக்கு துறவிகள் திருத்தம் இல்லாமல் இந்த சட்டமூலத்தை சட்டமாக்கவிடமாட்டோம் என்கிறார்கள் என்று
  வெகுளியாகக் கேட்கிறாள் மனைவி, "அப்படியென்றால் 'திருத்தி' சூது விளையாடலாம், என்ன?"

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .