Super User / 2010 நவம்பர் 08 , மு.ப. 11:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.பாருக் தாஜுதீன்)
வெலிக்கடை சிறைச்சாலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மோதல் தொடர்பாக விசாரணை நடத்துமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு (சி.ஐ.டி.) கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
இச்சம்பவம் தொடர்பாக கொழும்பு மேலதிக நீதிவான் முன்னிலையில் மனுவொன்றை தாக்கல் செய்த பொரளை பொலிஸ் நிலைய சார்ஜன்ட் செனரத், வெலிக்கடை மற்றும் மகஸின் மற்றும் விளக்கமறியல் சிறைச்சாலைகளில் கைதிகளிடம் போதைப்பொருட்களையும் ஏனைய சட்டவிரோதப் பொருட்களையும் கண்டுபிடிப்பதற்காக தேடுதல் உத்தரவை கொழும்பு பிரதம நீதவான் ரஷ்மி சிங்கப்புலியிடம் பொலிஸ் அத்தியட்சகர் பிரியலால் திசாநாயக்க பெற்றதாக தெரிவித்துள்ளார்.
மகஸின் மற்றும் விளக்கமறியல் சிறைச்சாலைகளில் தேடுதல் அமைதியான முறையில் நடைபெற்றதாகவும் கைதிகளிடமிருந்து ஹெரோயின் போதைப்பொருள், செல்லிடத் தொலைபேசிகள், தொலைபேசி பற்றரிகள், சிம் அட்டைகள் என்பனவற்றை பொலிஸார் கைப்பற்றியதாகவும் அவர் தெரிவித்தார்.
எனினும், வெலிக்கடை சிறைச்சாலையில் தேடுதலை ஆரம்பித்போது கைதிகள் பொலிஸாரை தாக்கி தேடுதல் நடவடிக்கையை தடுத்ததாகவும் பொலிஸ் சார்ஜன்ட் செனரத் தெரிவித்துள்ளார். இதனால் ஒரு பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் 45 பொலிஸார் மற்றும் 5 கைதிகள் காயமடைந்ததாகவும் அவர் கூறினார்.
இது தொடர்பான விசாரணை பொலிஸாரிடமிருந்து குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில் தொடர்பான புலனாய்வு அறிக்கையை நவம்பர் 30 ஆம் திகதி நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு நீதவான் பிராஷா ரணசிங்க, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டார்.
5 minute ago
13 minute ago
23 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
13 minute ago
23 minute ago
1 hours ago