2020 நவம்பர் 28, சனிக்கிழமை

மதுபானம் விற்கப்படும் உணவகங்கள் திறக்கப்படுவதாக ஜ.தே.மு. குற்றச்சாட்டு

Super User   / 2010 நவம்பர் 08 , பி.ப. 01:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கெலும் பண்டார)

மதுபானத்திற்கு எதிராக அரசாங்கம் பிரசாரம் செய்கின்றபோதிலும் மதுபானங்களை விநியோகிக்கும் உணவுவிடுதிகள் திறக்கப்பட்டு வருவதாக ஜனநாயக தேசிய முன்னணி கூறியுள்ளது.

வாடிக்கையாளர்களுககு மதுபானம் வழங்கும் புதிய சுற்றுலா உணவுவகங்களை திறப்பதற்கான சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளதாக ஜனநாயக தேசிய முன்னணியின் பொதுச் செயலாளர் விஜித ஹேரத் டெய்லி மிரருக்குத் தெரிவித்தார்.

எனினும் இதைப்பயன்படுத்தி அரசியல் செல்வாக்குடைய சிலர் தனியாக மதுபானம் மாத்திரம் விற்பனை செய்யும் விடுதிகளை திறக்க ஆரம்பித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

பதுளையில் சுற்றுலாப் பிரயாணிகள் அரிதாகச் செல்லும் பகுதியொன்றில் இத்தகைய உணவு விடுதியொன்றை நான் அவதானித்தேன். இப்போது அவர்கள் மதுபான நிலையங்களுக்கான அனுமதிப்பத்திரம் வழங்குவதில்லை. மாறாக மதுபானம் விநியோகிக்கக்கூடிய உணவு விடுதிகளுக்கான அனுமதிப்பத்திரங்களை தமது ஆதரவாளர்களுக்கு வழங்குகின்றனர்' என நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் மேலும் தெரிவித்தார்.

எவ்வாறெனினும் 3 நட்சத்திரம் அல்லது அதற்கு மேற்பட்ட அந்தஸ்துடைய உணவு விடுதிகள் மாத்திரமே மதுபானங்களை விற்பனை செய்ய முடியும் என கலால் திணைக்கள ஆணையாளர் நாயகம் டி.ஜி.என்.வி. ஹப்புஆரச்சி தெரிவித்தார்.

இத்தகைய விடுதிகளுக்கு குறைந்தபட்ச முதலீட்டு எல்லையொன்றும் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--