2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

ஜனாதிபதியால் பொன்சேகாவுக்கு மன்னிப்பு வழங்கப்படலாம்;சுமங்கல தேரர் நம்பிக்கை

Menaka Mookandi   / 2010 நவம்பர் 10 , மு.ப. 08:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மஹிந்த ராஜபக்ஷ இரண்டாம் தடவை ஜனாதிபதியாக பதவியேற்பதை முன்னிட்டு சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் இராணுவ தளபதியும் ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவருமான சரத் பொன்சேகாவுக்கு மன்னிப்பு வழங்கப்படலாம் என திப்பட்டுவாவே சுமங்கல தேரர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவின் பாரியாரான அனோமா பொன்சேகா உள்ளிட்ட குழுவினர் இன்று காலை மல்வத்து விகாரையில் தேரரை சந்தித்து உரையாற்றிய போதே அவர் இந்த நம்பிக்கையினை வெளியிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்துள்ள சுமங்கல தேரர், "ஜனாதிபதியின் பதவியேற்பை முன்னிட்டு அனைத்து மதத் தலைவர்களும் இணைந்து பொன்சேகாவுக்கான மன்னிப்பு தொடர்பில் ஜனாதிபதியிடம் கலந்துரையாட யோசனை செய்துள்ளதாக" தெரிவித்துள்ளார்.

"இது விடயமாக ஜனாதிபதியிடம் ஏற்கனவே இரு முறை கோரிக்கை முன்வைத்துள்ளோம். எம்மாள் முடிந்த வரையில் நாம் முயற்சித்தோம். இருப்பினும் மீண்டுமொருமுறை பொன்சேகாவுக்கான மன்னிப்பு குறித்து ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம்" என்று சுமங்கல தேரர், அனோமா பொன்சேகாவிடம் உறுதியளித்துள்ளார். (LD)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .