Editorial / 2026 பெப்ரவரி 05 , பி.ப. 02:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்திய பிரஜைகளால் கடலில் இலங்கை மீனவர்கள் தாக்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஊடகங்களால் முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்திய அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
2026 ஜனவரி 29 ஆம் திகதி இலங்கை மீனவர்கள் கடலில் தாக்கப்பட்டதாக வெளியான செய்திகளை நாம் அறிந்துள்ளோம்.
எமது தரப்பில், இந்திய கடற்படையினராலோ அல்லது இந்திய கரையோரக் காவல் படையினராலோ அவ்வாறான எந்தவிதமான தாக்குதல்களும் மேற்கொள்ளப்படவில்லை என்பதனை நாம் மிகவும் உறுதியாகக் கூறுகின்றோம்.
மீனவர்களின் வாழ்வாதார ரீதியான விடயங்கள் தொடர்பாக மனிதாபிமான அணுகுமுறை கடைப்பிடிக்கப்பட வேண்டுமெனவும், எந்தச் சந்தர்ப்பத்திலும் பலத்தை பயன்படுத்தக் கூடாதெனவும் இந்தியா தொடர்ச்சியாக வலியுறுத்திவருகின்றது.
இவ்வாறான விவகாரங்கள் குறித்து நாம் தொடர்ந்தும் இலங்கை அரசாங்கத்துடன் தொடர்பினைப் பேணிவருகின்றோம்.
21 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
1 hours ago
2 hours ago