2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

'சமூக ஜனநாயகவாதிகளின் பேரவை' அங்குரார்ப்பணம்

Kogilavani   / 2010 நவம்பர் 10 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(க.கோகிலவாணி)

நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்காகவும் நாட்டின் வளங்களைப் பாதுகாக்கவுமென 'சமூக ஜனநாயகவாதிகளின் பேரவை' எனும் அமைப்பொன்று உருவாக்கப்பட்டுள்ளது. சில அரசியல்கட்சிகளுடன் தனி நபர்களும் இணைந்து இவ்வமைப்பை தோற்றுவித்துள்ளனர்.

இவ்வமைப்பு தொடர்பாக விபரிக்கும் செய்தியாளர் மாநாடு இன்று கொழும்பில் நடைபெற்றது. புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன, தமிழ்த்தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கம், மேல் மாகாணசபை  ஐ.தே.க.  உறுப்பினர் ஸ்ரீலால் லக்திலக்க, சட்டத்தரணி எஸ்.ஜி.புஞ்சிஹேவா ஆகியோர் இச்செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டனர்.

சமூக ஜனநாயகவாதிகளின் பேரவை குறித்து கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன கூறுகையில்,'அரசாங்கம் தவறான பொருளாதார கொள்கைகளை முன்னெடுத்து வருகிறது.  பொருளாதார அபிவிருத்தி எனக் கூறிக்கொண்டு நாட்டின் வளங்களை பல்தேசிய நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் நடவடிக்கையே மேற்கொள்ளப்படுகிறது.

வடக்கில் அரசாங்கம் இராணுவ ஆட்சியை முன்னெடுக்கிறது. அதேவேளை, தெற்கில் அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தரப்பிலுள்ள சில கட்சிகள்  அரசாங்கத்தின் கொள்கைகளை ஆதரிப்பனவாக உள்ளன.

இவ்வாறான நடவடிக்கைகளைத் தடுத்து, சுதந்திர சமூக ஜனநாயகப் பயணத்தை மேற்கொள்வதே எமது நோக்கம். இதனாலேயே ஒருமித்த கருத்துடைய கட்சிகளையும் நபர்களையும் இணைத்து சமூக ஜனநாயகவாதிகளின் பேரவையை நாம் ஸ்தாபித்துள்ளோம்.

அதேவேளை, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும். அவர்களின் சுயாட்சி,  சுயநிர்ணய உரிமைகள் தொடர்பாக நாம் கலந்துரையாடிவருகிறோம். விருப்பத்துடன்தான் ஐக்கியத்தை ஏற்படுத்த முடியும். பலாத்காரமாக ஐக்கியத்தை திணக்க முடியாது. யுத்த ஆக்கிரமிப்பு மூலம் ஐக்கியத்தை ஏற்படுத்த முடியாது' ஏன்றார். (Pix By: Kithsiri De Mel)


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .