2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

நிதி பற்றாக்குறையால் கொழும்பில் மரக்கன்று நடுவதில் பிரச்சினை

Menaka Mookandi   / 2010 நவம்பர் 10 , பி.ப. 01:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(நபீலா ஹுசைன்)

நிதிப்பற்றாக்குறை காரணமாக, மஹிந்த ராஜபக்ஷ இரண்டாவது தடவையாக ஜனாதிபதியாக சத்தியபிரமாணம் செய்யும் நிகழ்வையொட்டி 'நாட்டை பாதுகாத்தல்' என்ற நிகழ்ச்சித் திட்டத்துக்காக ஒரு மில்லியன் மரக்கன்றுகளை வழங்க முடியாதுள்ளதாக கொழும்பு சமுர்த்தி உத்தியகத்தர்கள் முறையிட்டுள்ளனர் என சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் இன்று கூறியது.

தமக்கு மரக்கன்றுகளோ அல்லது அவற்றை வாங்குவதற்கான பணமோ வழங்கப்படாத நிலையில் மரங்களை அவர்கள் வழங்க முடியாதிருப்பதாக அந்த சங்கம் அறிவித்துள்ளது.

ஜனாதிபதியின் பிறந்த நாளை கௌரவிப்பதற்காக நாடு முழுவதும் 11 நிமிடங்களில் 1.1 மில்லியன் மரங்கள் அடுத்த திங்கட்கிழமை நடப்பட வேண்டும். ஒவ்வொருவரும் 100 மரங்கள் நடவேண்டும். அவற்றை நட்டவர்களின் பெயர் பட்டியலை மாவட்ட செயலகத்துக்கு கொடுக்க வேண்டும் என மாவட்ட சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே மரக்கன்றுகளை வழங்க முடியாத நிலைமை எற்பட்டுள்ளதாக தெரிவித்த மேற்படி சங்கம் இது தொடர்பில் கொழும்பு மாவட்ட செயலகத்துக்கு முறையிட்டதாகவும் கூறியது. இதேவேளை, மரம் நாட்டுவதற்கான இடமும் பற்றாக்குறையாகவே உள்ளது. விலையுயர்ந்த மரக்கன்றுகளை விலைகொடுத்து வாங்குவதற்கு பணம் இல்லை.

இந்நிலையில் கட்டளைப்படி செய்யாவிட்டால் எம்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் செயலாளர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .