2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

உள்ளூராட்சி திருத்தச் சட்டமூலம் குறித்து அரசாங்கத்துடன் பேச்சு: அ.இ.மு.கா

Super User   / 2010 நவம்பர் 11 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(றிப்தி அலி)

உள்ளூராட்சி தேர்தல் முறை திருத்தச் சட்டமூலத்தில் சிறுபான்மையினருக்கு பாதகமாக உள்ள சில விடயங்கள் தொடர்பில் அரசாங்கத்துடன் பேச்சு நடத்துவதற்கு தமது கட்சியின் அதியுயர் பீடம் தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ்  பாரூக் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

திருத்தச் சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றத்தின் அனைத்து வட்டாரங்களிலும் 5% இற்கு மேலதிகமாக வாக்குகளை பெறவேண்டும் என்பதை நீக்குவதுடன் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் எல்லை நிர்ணய குழுவுக்கு உறுப்பினர்களை நியமிக்கும் போது குறைந்தது ஒரு முஸ்லிம் உறுப்பினரையாவது நியமிக்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த விடயங்கள் குறித்து எமது கட்சி மிகவிரைவில் அரசாங்கத்துடன் பேச்சு நடத்தி சில திருத்தங்களை மேற்கொள்ளும் என ஹுனைஸ் பாரூக் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை, அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் இச்சட்டமூலத்திற்கு ஆதரவாக கிழக்கு மாகாண சபையில் வாக்களித்தமையும் குறிப்பிடத்தக்கது.

அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சியாகும். இக்கட்சி கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிட்டு வன்னி மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் மூன்று ஆசனங்களை கைப்பற்றியது.
 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .