2020 டிசெம்பர் 02, புதன்கிழமை

அரசாங்கவரிசை ஆசனங்களில் அமர்வதற்கு முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானம்

Super User   / 2010 நவம்பர் 12 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(றிப்தி அலி)

நாடாளுமன்றத்தில் அரசாங்க வரிசைக்கு மாறி முழுமையாக அரசாங்கத்தில் இணைந்துகொள்வதற்கு  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. நேற்றிரவு நடைபெற்ற கட்சியின் அதிஉயர்பீடக் கூட்டத்தில் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பஷீர் சேகுதாவூத் தமிழ் மிரர் இணையத்தளத்திற்குத் தெரிவித்தார்.

இதன்படி எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மீண்டும் நாடாளுமன்றம்கூடும்போது முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற அங்கத்தவர்கள் அரசாங்கவரிசை ஆசனங்களில் அமர்ந்துகொள்வர் என பஷீர் சேகுதாவூத் கூறினார்.

கடந்த செவ்வாய்க்கிழமை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமையும் நேற்றுமுன்தினம் புதன்கிழமை முஸ்லிம் காங்கிரஸின்  8 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சந்தித்தபோது அவர்களை அரசாங்கத்துடன் இணையுமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.


இக்கோரிக்கை தொடர்பாக கட்சியின் உயர் பீடத்தில் ஆராயப்பட்டபோது அரசாங்கத்துடன் இணைந்துகொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டதாக சேகுதாவூத் தெரிவித்தார்.

இதேவேளை தனக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டுமென பஷீர் சேகுதாவூத் கோருவதாக வெளியான செய்திகள் குறித்து அவரிடம் கேட்டபோது கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு அடுத்தாக கட்சி எம்.பிகளுக்கு வழங்கப்படும் பதவி தனக்கு வழங்கப்பட வேண்டுமெனக் கோருவதாக பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .