2020 நவம்பர் 23, திங்கட்கிழமை

கதிர்காமர் கொல்லப்பட்ட இடத்தில் டிசெம்பர் முதலாம் திகதி மேல் நீதிமன்ற விசாரணை

Super User   / 2010 நவம்பர் 12 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் கொலை செய்யப்பட்ட இடத்தில் எதிர்வரும் டிசெம்பர் முதலாம் திகதி 2 மணிக்கு விசாரணை நடத்துவதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று தீர்மானித்தது.

இவ்வழக்கின் பிரதிவாதிகளான முத்தையா சகாதேவன், இஸினோர் ஆரோக்கியநாதன் ஆகியோர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி கே.வி. தவராசா கொலை நடந்த இடத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமென சமர்ப்பித்த மனுவை பரிசீலித்த மேல் நீதிமன்ற நீதிபதி குமுதினி விக்கிரமசிங்க மேற்படி உத்தரவை வழங்கினார்.

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரை கொலை செய்ய சதிசெய்தமை, உதவியளித்தமை, உடந்தையாக இருந்தமை, 2005 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் அவரின் வாசஸ்தலத்தில் வைத்து சுட்டுக்கொன்றமை ஆகிய குற்றச்சாட்டுகள் மேற்படி பிரதிவாதிகள் மீது சுமத்தப்பட்டுள்ளன.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--