2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

போத்தல ஜயந்தவுக்கு சர்வதேச விருது

Super User   / 2010 நவம்பர் 14 , மு.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கடந்த வருடம் தாக்குதலுக்குள்ளான இலங்கை ஊடகவியலாளர் போத்தல ஜயந்தவுக்கு சர்வதேச விருதொன்று வழங்கப்படவுள்ளது. ஊழல்களுக்கு எதிரான அமைப்பான ட்ரான்பரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பினால் இவ்வருடம் நேர்மைக்கான விருது வழங்கப்படவுள்ளவர்களின் பட்டியலில் போத்தலவின் பெயரும் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் அநீதியை வெளிப்படுத்துவதில் போத்தல ஜயந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டதாக ட்ரான்பரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் பொதுச்செயலாளரான போத்தல ஜயந்த, கடந்த வருடம் ஜூன் முதலாம் திகதி இனந்தெரியாத குழுவொன்றினால் தாக்கப்பட்டு படுகாயமடைந்தமை குறிப்பிடத்தக்கது. அதன்பின் அவர் அமெரக்காவுக்கு குடிபெயர்ந்தார்.

"இலங்கையில் அரச ஊடகத்தில் பணியாற்றிய வேளை ஊழல்களுக்கு எதிராகவும் ஊடக சுதந்திரத்திற்காகவும் என்னால் போராட முடிந்தமை குறித்து மகிழ்சியடைகிறேன். ஆனால் அதன் விளைவாக நான் நாட்டைவிட்டு வெளியேற வேண்டியிருந்தது" என போத்தல ஜயந்த தெரிவித்துள்ளார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--