Suganthini Ratnam / 2010 நவம்பர் 16 , பி.ப. 12:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எஸ்.செல்வநாயகம்)
பிரதம நீதியரசர் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய குழாம், முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தன்னை நாடாளுமன்ற அங்கத்தவர் என்ற வகையில் நாடாளுமன்றத்தின் சகல நடவடிக்கைகளிலும் பங்குகொள்ள அனுமதிக்க வேண்டுமென தாக்கல் செய்த விண்ணப்பம் தொடர்பான நடவடிக்கைகளை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிறுத்திவைக்க வேண்டுமென பணித்துள்ளது.
நீதிபதிகள் குழாமில் பிரதம நீதியரசர் அசோக டி.சில்வா, நீதிபதிகள் சிரானி டி சில்வா, என்.ஜி.அமரதுங்க, சலீம் மர்சூப், கே.சிறிபவன் ஆகியோர் இருந்தனர்.
இராணுவ நீதிமன்றம் அரசியலமைப்பின் பிரகாரம் ஒரு நீதிமன்றமா, இல்லையாவென கருத்துரைக்குமாறு மேன்முறையீட்டு மன்றம் உயர்நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்ட நிலையிலேயே, உயர் நீதிமன்றம் இந்த பணிப்புரையை செய்துள்ளது.
1 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
4 hours ago