2020 நவம்பர் 28, சனிக்கிழமை

வெற்றி எப்.எம். செய்திப்பிரிவை சேர்ந்த ஊடகவியலாளர் தாக்கப்பட்டார்

A.P.Mathan   / 2010 நவம்பர் 17 , மு.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வெற்றி எப்.எம். செய்திப்பிரிவில் பணிபுரிகின்ற ஊடகவியலாளர் லெனின் நேற்றிரவு 11 மணியளவில் இனந்தெரியாத நபர்களினால் தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்.

தனது பணியினை முடித்துவிட்டு வத்தளையிலுள்ள வீட்டிற்கு இரவு 11 மணியளவில் சென்று கொண்டிருந்த சமயம் 8 பேர்கொண்ட இனந்தெரியாத கும்பலொன்று லெனின்மீது சரமாரியாக தாக்குதலை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளது.

படுகாயமடைந்த லெனின் உடனடியாக வத்தளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். வத்தளை பொலிஸார் இவ்விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த ஜூலை மாதம் வெற்றி எப்.எம். செய்திப்பிரிவின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போதும் ஊடகவியலாளர் லெனின் தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--