A.P.Mathan / 2010 நவம்பர் 17 , பி.ப. 02:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவின் தமிழக ஆளுநர் விருதான 'மிகச் சிறந்த கர்நாடக இசைப்பாடகி' என்னும் உயரிய விருதை கொழும்பு, கொட்டாஞ்சேனையை சேர்ந்த செல்வி ஹம்சத்வனி பெற்றுள்ளார்.
சிறுபராயம் முதலே கர்நாடக சங்கீதத்தில் தனது முழுமையாக ஈடுபாட்டையும் திறமையையும் வெளிக்காட்டியதன் காரணமாக இந்தியாவின் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சங்கீததுறையில் பட்டப்படிப்பினை தொடரும் வாய்ப்பை பெற்றிருந்தார். இதன்படி தமிழ்நாட்டின் சிதம்பரத்திலுள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பினை தொடர்ந்த இவர் இறுதித்தேர்வில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்று 'தமிழக ஆளுநர் விருது' பெறுவதற்கு தெரிவு செய்யப்பட்டார். அத்துடன் சங்கீதத்துறையில் இளமாணி பட்டத்தையும் பெற்றுள்ளார். தற்சமயம் முதுமாணி பட்டப்படிப்பினை அதே பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து வருகிறார் ஹம்சத்வனி.

1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago