2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

கணிசமான சம்பள அதிகரிப்பு வழங்கினால் பாரிய அபிவிருத்திகளை கைவிட நேரிடும்: ஜனாதிபதி

Super User   / 2010 நவம்பர் 17 , பி.ப. 08:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கெலும் பண்டார)

அரசாங்க ஊழியர்களுக்கு அரசாங்கம் கணிசமான சம்பள அதிகரிப்பை வழங்கினால் பாரிய அபிவிருத்தித் திட்டங்களை  கைவிட வேண்டிய நிலைக்கு அரசாங்கம் தள்ளப்படலாம் என நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அரசாங்க ஊழியர் ஒருவருக்கு மாதாந்தம் 100 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்குவதானால் அரசாங்கத்திற்கு 1.4 பில்லியன் ரூபா செலவு ஏற்படும் என  ஜனாதிபதி தெரிவித்தார். அப்போது கல்வியமைச்சர் பந்துல குணவர்தன. அரசாங்கத்தின் வருடாந்த வருமானம் 800 பில்லியன் ரூபாவாகவும் அரசாங்க ஊழியர்களுக்கான சம்பளத்திற்கான செலவு 500 பில்லியன் ரூபாவாகவும் இருப்பதாக சுட்டிக்காட்டினார்.

அத்துடன், தொழிற்சங்கத் தலைவர்களுடனான தனது அண்மைய கலந்துரையாடலின்போது, அரசாங்கம் அபிவிருத்தித் திட்டங்களை நிறுத்துவதை தொழிற்சங்கத் தலைவர்கள் விரும்பவில்லை எனத் தெரிவித்ததாக ஜனாதிபதி கூறினார்.

அதேவேளை, நாடாளுமன்ற வளாகத்தில் மற்றொரு கட்டிடம் அமைப்பது குறித்து ஜனாதிபதி கருத்துத தெரிவிக்கையில், தற்போதைய கட்டிடத்தின் தோற்றத்தை மறைக்காத விதமாக அத்திட்டம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார்.

நிர்வாக பணிகளுக்கான இடத்தைப் பெறுவதற்காக நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் சேகரித்துவைக்கப்பட்டுள்ள வெளியீடுகள் ஆவணங்கள் முதலானவற்றை வேறொரு இடத்திற்கு கொண்டு செல்லவேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தினார். ஹன்சார்ட் அறிக்கைகளை இறுவெட்டுகளில் பதிவு செய்ய முடியும் எனவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .