2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

கொழும்புக்கும் மதுரைக்கும் இடையில் விமான சேவையை நடத்த திட்டம்

Menaka Mookandi   / 2010 நவம்பர் 19 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கொழும்புக்கும் மதுரைக்கும் இடையேயான விமான சேவையை அறிமுகப்படுத்துவது தொடர்பில் இரு நாட்டு அதிகாரிகளுக்கும் இடையில் பேச்சவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

இது விடயம் தொடர்பாக கலந்துரையாடுவதற்காகவும் மதுரை விமான நிலையத்தின் தன்மையைக் கண்டறிவதற்கும் ஸ்ரீ லங்கன் விமான சேவையில் அதிகாரிகள் சிலர் நேற்று மதுரைக்கு விஜயம் செய்திருந்ததாகவும் மேற்படி செய்திகள் கூறுகின்றன.

கொழும்பிலிருந்து மதுரைக்கு விமான சேவையை நடத்துவது தொடர்பாக இதன்போது ஆலோசிக்கப்பட்டதாகவும் விரைவில் இதுதொடர்பான திட்டமொன்று இந்திய விமானப் போக்குவரத்து ஆணையகத்திடம் கையளிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் எதிர்வரும் 2011ஆம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் முதல் இந்த விமான சேவை ஆரம்பிக்கப்படலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக மேற்படி செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .