2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

ஹெய்ட்டியிலுள்ள இலங்கை அமைதி காக்கும் படையினரால் முக்கிய குற்றவாளிகள் மூவர் கைது

Super User   / 2010 டிசெம்பர் 06 , பி.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஹெய்ட்டியிலுள்ள இலங்கை அமைதி காக்கும் படையினர் ஹெய்ட்டியின் முக்கிய குற்றவாளிகள் மூவரை கைது செய்துள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.

'தேர்தல் நடைபெறவிருந்த சூழ்நிலையில், முக்கிய குற்றவாளிகள் மூவர் துப்பாக்கிகள், மகஸின்கள், துப்பாக்கி ரவைகள் என்பனவற்றுடன் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர் கிளிக் நகரில் நடைபெற்ற பல கொலைச் சம்பவங்கள் தொடர்பாக தீவிரமாக தேடப்பட்டவர். தேர்தலின்போதும் அதன்பின்னரும் ஆயுதங்கள் மூலம் வன்முறைகளை ஏற்படுத்துவதற்கு திட்டமிட்டுக்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படும் நிலையில் அவர் கைது செய்யப்பட்டார்' என இராணுவம் தெரிவித்துள்ளது.

ஹெய்ட்டியில் அண்மையில் நடைபெற்ற தேர்தலின்போது இலங்கைப் படையினர் வினைத்திறனுடன் பங்களிப்புச் செய்ததாகவும் இராணுவம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .