Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Suganthini Ratnam / 2010 டிசெம்பர் 08 , மு.ப. 05:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கே.எஸ்.வதனகுமார்)
இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்பட்ட 332 உறுப்பினர்களுக்கு இன்று புதன்கிழமை முதல் மூன்று நாள் பயிற்சி தேசிய இளைஞர் சேவைகள் மன்ற கேட்போர்கூடத்தில் நடைபெறவுள்ளது.
பயிற்சிக்கு அழைக்கப்பட்ட இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இன்று இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் நாடாளுமன்றத்திற்கு சென்று அங்கு நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வு, வரவு, செலவு திட்ட விவாதங்களை பார்வையிடவுள்ளனர். இதனைத்தொடர்ந்து, மகரகம இளைஞர் நிலையத்தில் நடைபெறும் பயிற்சிகளிலும் பங்குபற்றவுள்ளனர்.
இம்மாதம் 12ஆம் திகதி, இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்கள் இலங்கை ஜனநாய சோசலிச குடியரசின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதுடன், 18ஆம் 19ஆம் திகதிகளில் முதல் அமர்வு இடம்பெறவுள்ளதாகவும் இளைஞர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
1 hours ago
6 hours ago