Super User / 2010 டிசெம்பர் 08 , பி.ப. 02:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
(முறாசில்)
ஊழலுக்கு எதிரான கண்காணிப்பு மையமான 'ட்ரான்ஸ்பரன்ஸி இன்டநெஷனல் ஸ்ரீலங்கா' அமைப்பினால் ஒழுங்குசெய்யப்பட்டுள்ள தேசிய நேர்மைத்திறன் விருது வழங்கும் விழா நாளை மாலை 4.00 மணிக்கு கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
ஊழலுக்கு எதிராக போராடிய தனிநபர்களின் தைரியம் மற்றும் மனவுறுதியை அங்கீகரிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இவ்விருது வழங்கும் விழாவில் பிரதம அதிதியாக நேபாளத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற எழுத்தாளரும் தெற்காசியாவின் கலாசார அபிவிருத்திக்கான தேசிய எல்லைகள் கடந்த செயற்பாட்டாளருமான கானக் மானி திக்ஷப்ட் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார்.
நேர்மைத்திறன் விருது வழங்கும் விழா 2004ஆம் ஆண்டு முதல் நடாத்தப்பட்டுவரும் நிலையில் இற்றை வரை ஒன்பது பேர் இவ்விருதைப் பெற்றுள்ளதோடு மேலும் நான்கு பேர் சிறப்பு விருதுகளையும் வென்றுள்ளனர்.
24 minute ago
25 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
25 minute ago
45 minute ago