Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2010 டிசெம்பர் 09 , மு.ப. 07:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிகிரியாவிலுள்ள ஹோட்டலொன்றில் இன்று காலை ஏற்பட்ட கைகலப்பில் சுற்றுலாப் பயணிகள் இருவர் உட்பட மூவர் காயமடைந்துள்ளனர்.
சுற்றுலாப் பயணிகளால் கேட்கப்பட்ட உணவை குறித்த ஹோட்டலில் உணவு பரிமாறுபவர் வழங்கத் தவறியதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் நால்வருக்கும் உணவு பரிமாறுபவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் கைகலப்பில் முடிந்துள்ளது.
மேற்படி சுற்றுலாப் பயணிகளால் முதலில் வழங்கப்பட்ட உணவுக்கு பணம் கொடுத்ததால் பின்னர் கேட்கப்பட்ட உணவுகளை ஹோட்டலில் உணவு பரிமாறுபவர் வழங்க மறுத்துள்ளதாக சிகிரியா பொலிஸார் தெரிவித்தனர்.
சுற்றுலாப் பயணியொருவர் குறித்த ஹோட்டலில் உணவு பரிமாறுபவரை முள்ளுக்கரண்டியால் தாக்கியபோது, அவரும் சுற்றுலாப் பயணிகள் மீது கரண்டியால் பதில் தாக்குதல் நடத்தினார்.
இது தொடர்பில் இரு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவித்த பொலிஸார், குறித்த ஹோட்டல் முகாமைத்துவமும் சுற்றுலாப் பயணிகளும் முறைப்பாடு செய்ததாகவும் கூறினர். SD/KKA)
16 Oct 2025
16 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 Oct 2025
16 Oct 2025