2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

பைசால் காசிம் எம்.பி. என்னை தவறாக புரிந்துகொண்டுள்ளார்: ஹஸன் அலி

Super User   / 2010 டிசெம்பர் 09 , பி.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம்- இந்தியா சென்ற விடயம் தனக்கு தெரியாது என்று மாத்திரமே தான் பத்திரிகைகளுக்கு தெரிவித்ததாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஹஸன் அலி தெரிவித்தார்.

இன்று வியாழக்கிழமை வெளியான ஊடகங்களில்  நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் வெளியிட்டுள்ள அறிக்கை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ஹஸன் அலியால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

"நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் என்னை தவறாக புரிந்துகொண்டு ஊடகங்களுக்கு தவறான அறிக்கைகளை விடுத்துள்ளார்.

நான் ஒரு போதும் எனது கட்சிக்காரர்களை காட்டிக்கொடுத்ததுமில்லை, காட்டிக்கொடுக்கப்போவதுமில்லை.

கட்சியின் உயர் பதவியிலிருந்துகொண்டு சிறு பிள்ளைத்தனமான செயல்களை நான் செய்யவில்லை.

ஊடகவியலாளர்களினால் எழுதப்பட்ட செய்திகளுக்காக என்னை பலிக்கடாவாக்க முனைகிறார் பைசால் காசிம்.

கட்சியின் தலைவர் மட்டத்தில் தீர்க்கப்பட வேண்டிய விடயத்தை சிறுபிள்ளைத்தனமாக பத்திரிகைகளில் பகிரங்கப்படுத்தியதையிட்டு வெட்கித் தலைகுனிகின்றேன்.

கட்சியின் விசுவாசி யார்?, கட்சியை காட்டிக்கொடுத்தவர் யார்?, கட்சிக்கு முட்டுக்கொடுத்தவர் யார்? என்பதை தீர்மானிப்பது கட்சியின் போராளிகளே.

அதைவிடுத்து கட்சியின் விசுவாசி யார்? கட்சிக்கு முட்டுக்கொடுத்தவர் என்றெல்லாம் விளம்பரப்படுத்தத் தேவையில்லை"

மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் பைஸால் காசீம் 09.12.2010 வியாழக்கிழமை விடுத்த அறிக்கையில்தான் கோவைக்கு புறப்படுவதற்கு முன்னர் முஸ்லிம் காங்கிரஸின் செயலாளரைத் தவிர தலைவர், தவிசாளர் மற்றும் ஏனைய முஸ்லிம் காங்கிரஸ் எம்.பிக்களிடம் நட்பு ரீதியில் இந்தப் (கோவை) பயணம் குறித்து தெரிவித்ததாகக் கூறியுள்ளார்.

அவர் விடுத்த அறிக்கையிலேயே கோவைப் பயணம் குறித்து என்னிடம் தெரிவிக்கையில்லை என்று குறிப்பிட்டிருக்கையில், எவ்வாறு அப்பயணம் பற்றி எனக்கு தெரியும் என்று கூற முடியும்? என்னிடம் கூறப்படாத எனக்குத் தெரியாத பயணம் பற்றி, ஊடகங்கள் கேட்டபோது பைஸால் காசீம் இந்தியா சென்றது எனக்கு தெரியாது என்று குறிப்பிட்டதில் என்ன தவறு இருக்கின்றது.

அக்கூற்றை எவ்வாறு எழுந்தமானமான அபிப்பிராயமென்றும், கருத்தென்றும் கூற முடியும்? இதனை எப்படி அவர் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சியாக பார்க்க முடியும்?

தெரியாதததை தெரியாததென்ற கூறுவதனை பூதாகாரப் படுத்துவதாகக் கருதலாமா?

கட்சியின் தலைமைக்கும் அவருக்குமிடையே (பைஸால் காசீமிக்குமிடையே) முரண்பாடுகளை தோற்றுவிக்கும் கூற்றாகக் கருத முடியுமா?

இவற்றின் அடிப்படையில் அவரின் அறிக்கையானது நான் எதனை கூறினேன் என்பதனை சரியாகப் புரிந்து கொள்ள முடியாத  தன்மையுடையது என்று புரிகின்றது.

கட்சியின் எனது இருப்பை பாதுகாத்து கொள்வதற்கு எந்தவொரு குறுக்கு வழியையும் தெரிவு செய்யவேண்டிய அவசியம் எனக்கில்லை.

கட்சி தொடர்பான எனது விசுவாசத்தை கட்சியின் ஆதவாளர்கள் மட்டுமின்றி மாற்றுக் கட்சி சகோதரர்களும் நன்கு புரிந்து கொள்வார்கள் என்பதில் ஐயமில்லை.

மேலும், பைஸால் காசீம் எம்.பி இந்தியா சென்ற விடயம் எனக்கு தெரியாதென்று நான் கூறியதற்கு மேலதிகமாக வெளிவந்த தகவல்கள் குறிப்பிட்ட ஊடகவியலாளரினால் சேகரிக்கப்பட்ட தகவல்கள் என்பது அதில் தெளிவாக இருக்கின்றன.

ஆயினும், பைஸால் காசீம் எம்.பி அவற்றை புரிந்து கொள்ளாது என் மீது பழியைப் போட முனைந்திருப்பது அவரின் அறியாமையையும் அவசரத்தையும் எடுத்துக் காட்டுவதாகவுள்ளது.
ஆகவே, கட்சியின் ஆதவாளர்கள் இவ்விடத்தில் தெளிவடைந்திருப்பாரக்ள் என்று நம்புகின்றேன்.  


  Comments - 0

 • acord4 Friday, 10 December 2010 09:53 AM

  தயவு செய்து முஸ்லிம் காங்கிரசை இல்லாமல் ஆக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கின்றேன்.காங்கிரஸ் கிழக்குக்கு மட்டும் இல்லை.முழு இலங்கைக்கும் தான்.கிழக்கு கிழக்கு என்று பட்டது போதும்.

  Reply : 0       0

  Mohamed Friday, 10 December 2010 02:41 PM

  உண்மைதான். நாங்கள்தான் தீர்மானிக்க வேண்டும். நீங்கள் விளம்பரம் செய்யவேண்டியதில்லை.

  Reply : 0       0

  mohamed Friday, 10 December 2010 08:10 PM

  கிழக்கு கிழக்கு என்று மட்டும் தான் மு.கா. இருக்கிறது.
  அந்த நிலை மாற்றி அமைக்கப்பட வேண்டும்.

  Reply : 0       0

  yarro oruvan Friday, 10 December 2010 08:56 PM

  தலைவர் asraf இருந்தால் இதுமாதிரி நிகழ்வுகள் நடக்காது.முஸ்லிம் காங்கரஸ் இன்று திசை மாறிய பறவைகள் போன்றுதான் செயல் படுகின்றது.எல்லாரும் தலைவர்கள் இங்கு,அவரவர் இஷ்டப்படிதான் நடந்து கொள்கின்றார்கள்.

  Reply : 0       0

  M.M.Muzammil Friday, 10 December 2010 09:07 PM

  இலங்கை முஸ்லிம் காங்கரஸ் என்பது குறிப்பிட்ட கூட்டத்தாரின் சொத்து அல்ல. தயவு செய்து உங்கள் உள்ளூர் பிரச்சினைகளை மற்றவர்களுக்கு அம்பல படுத்தாதீர்கள் .

  Reply : 0       0

  acord4 Sunday, 12 December 2010 08:44 AM

  அந்நிய சமூகம் சிரிக்காமல் இருக்கப் பாருங்கள்.ரெட் கலர் தொப்பி போட்டவர்களிடம் மாட்ட வேண்டாம்.

  Reply : 0       0

  xlntgson Sunday, 12 December 2010 10:08 PM

  இதெற்கெல்லாம் காரணம் எதிர்கட்சியில் இருந்தால் மக்களுக்கு சேவை செய்ய இயலாது என்று பொய் கூறுவது தான்.
  இங்கும் அங்குமாக தாவிக்கொண்டிருப்பதை விட அமைச்சுப் பதவிகளுக்காக அலை மோதிக் கொண்டிருப்பதைவிட பொறுத்துக்கொண்டு இருந்தால் குறைந்தது அடுத்த தேர்தலிலாவது நன்மை அடையலாம். இல்லாவிட்டால் கேவலம் கேவலப்படுவது பா உக்கள் மட்டுமல்ல, எல்லாரும்.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--