Super User / 2010 டிசெம்பர் 10 , மு.ப. 07:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிக, நடிகையர்கள் ஊடகங்களின் முன்னாலும் படப்பிடிப்புகளுக்காகவும் பாதுகாப்புப் படைகளின் சீருடையை மற்றவர்கள் அணிவதற்கு முன் அனுமதி பெற வேண்டும் என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
நடிகர்கள், நடிகையர்கள் ஊடகங்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சிகளுக்காக பாதுகாப்புப் படையினரின் சீருடை பயன்பாட்டை தரப்படுத்துவதற்கு அமைச்சு தீர்மானித்துள்ளது.
மேற்படி சூழ்நிலையி;ல், எந்தவொரு நபரோ அல்லது நிறுவனமோ பாதுகாப்புப் படைகளின் சீருடையை பயன்படுத்த விரும்பினால் தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தின் மூலம் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இச்சீருடைகளை பயன்படுத்துவதற்கான ஒழுங்குவிதிகள் ஏற்கெனவே அமுல்படுத்தப்பட்டுள்ளன. எந்தவொரு நபரோ நிறுவனமோ இவ்விதிகளை மீறினால் வழக்குத் தொடரப்படும் என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
அதேவேளை, பாதுகாப்புப் படையினரின் சீருடைகளை தொலைக்காட்சி செய்திகளில் காண்பிப்பது தடுக்கப்படவில்லை எனவம் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .