2020 ஒக்டோபர் 01, வியாழக்கிழமை

இராஜதந்திரிகள் மீது மைத்திரிபால குற்றச்சாட்டு

Super User   / 2010 டிசெம்பர் 10 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஐரோப்பாவில் உள்ள இலங்கை இராஜதந்திரிகள் சிலரின் செயற்திறமையின்மையின் விளைவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஒக்ஸ்போர்ட் யூனியன் உரை ரத்துச்செய்யப்பட்டமைக்கு காரணமாகும் என சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன குறை கூறியுள்ளார்.

சோம்பேறித்தனமான இந்த இராஜதந்திரிகளினால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உரையை எல்.ரீ.ரீ.யி ஆதரவு சக்திகளால் தடுக்க முடிந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த இராஜதந்திரிகள் இலங்கை மக்களின் பணத்தின் மூலம் அங்கு சொகுசு வாழ்க்கையை அனுபவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .