2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவர் மோதலில் பலி

Super User   / 2010 டிசெம்பர் 12 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

(காந்த்ய சேனநாயக்க)

கடந்த வெள்ளிக்கிழமை கொள்ளைச் சம்பவமொன்றின் பின், இடம்பெற்ற மோதலில் பொலிஸாரை சுட்டுக்கொன்ற குழுவைச் சேர்ந்த மேலும் இருவர் இன்று மீரிகமவில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
 

இராணுவத்தினர் மற்றும் பொலிஸாருடனான மோதலில் இவர்கள் கொல்லப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் பிரஷாந்த ஜயகொடி டெய்லி மிரர் இணையத்தளத்திற்குத் தெரிவித்தார்.

நேற்று இடம்பெற்ற மோதலிலும் கொள்ளையுடன் தொடர்புடைய இருவர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது. வெள்ளிக்கிழமை அம்பேபுஸ்ஸவில்இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தில் 7 பேர் சம்பந்தப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.

ஏனைய மூன்று சந்தேக நபர்களையும் தேடி மீரிகமவில் பொலிஸார் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
 


  Comments - 0

  • Bareer Monday, 13 December 2010 07:29 PM

    இங்கு கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றது வரகபோல நகரில் ஆகும். ஆனால் அம்பேபுஸ்ஸ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.செய்திகள் துல்லியமாகவும் மிக ச்ச ரியாகவும் வளங்கப்ப் பட வேண்டும் .

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X