Super User / 2010 டிசெம்பர் 15 , பி.ப. 09:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கெலும் பண்டார)
மாவட்டச் செயலாளர் பதவிகளை மீண்டும் அரசாங்க அதிபர் என மாற்றி அவர்களுக்கு கூடுதலான அதிகாரங்களை வழங்குவது குறித்து பொதுநிர்வாக, உள்ளுராட்சி அமைச்சு ஆராய்ந்து வருகிறது. இது தொடர்பாக இவ்வமைச்சு சட்டமா அதிபருடன் கலந்தாலோசனை நடத்தியதாக அமைச்சர் ஜோன் செனவிரட்ன நேற்று தெரிவித்தார்.
"இவ்விடயம் குறித்து நாம் சட்டமா அதிபருடன் நாம் கலந்தாலோசனை நடத்தினோம். அவர் இது குறித்து ஆராய்ந்து வருகிறார். மேலதிக பிரதேச செயலாளர்களை கண்காணிப்பதற்கு ஏற்ற வகையில் மாவட்ட செயலாளருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்படும். மேலதிக மாவட்ட செயலாளரினால் எவருக்கேனும் அநீதி இழைக்கப்பட்டால் அது குறித்து மாவட்ட செயலாளரிடம் முறையீடு செய்யலாம்" என அமைச்சர் ஜோன் செனவிரட்ன தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .