2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

பொருத்தமில்லாத ஆடையால் அமைச்சரவைக் கூட்டத்திலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட அமைச்சர்

Super User   / 2010 டிசெம்பர் 15 , பி.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொருத்தமில்லாத ஆடையுடன் அமைச்சரவைக் கூட்டத்திற்கு வந்த அமைச்சர் ஒருவரை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திருப்பி அனுப்பிய சம்பவம் நேற்று புதன்கிழமை இடம்பெற்றது.


அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்கு கட்டைக் கையுள்ள பத்திக் ஷேர்ட் அணிந்தவாறு மேற்படி அமைச்சர் வருகை தந்திருந்தார்.


இதை அவதானித்த ஜனாதிபதி, வீட்டிற்குச் சென்று அமைச்சரவைக்குப் பொருத்தமான ஆடை அணிந்துகொண்டு வருமாறு குறித்த அமைச்சரை திருப்பி அனுப்பினார்.
 

குறித்த அமைச்சர் கடந்த அமைச்சரவை மாற்றத்தின்போது முதல் தடவையாக அமைச்சரவை அந்தஸ்து பெற்றவர். இதற்கு முன்னரும் பொருத்தமான ஆடை அணிந்துவருமாறு அவர் ஜனாதிபதியினால் அறிவுறுத்தப்பட்டிருந்தார்.
 


You May Also Like

  Comments - 0

  • tamilsalafi.edicypages.com Thursday, 16 December 2010 12:02 PM

    ஆள் பாதி ஆடை பாதி !! கட்டுப்பாடும் கட்டுக்கோப்பும் !! சட்டமும் ஒழுங்கும் !!

    Reply : 0       0

    xlntgson Thursday, 16 December 2010 08:48 PM

    பாராளுமன்றிலும், மாகாண சபைகளிலும், கட்சி கூட்டங்களிலும் தேசிய ஆடையில் மட்டுமே தோன்றவேண்டும் என்று சட்டம் இல்லையா?

    Reply : 0       0

    irfan Friday, 17 December 2010 02:58 PM

    கலாநிதிக்கு என்ன ஆடை கட்டுப் பாடு ?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .