Super User / 2010 டிசெம்பர் 16 , மு.ப. 07:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
(நபீலா ஹுஸைன்)
அரசியல் காரணங்களை முன்னிட்டே கடந்த வாரம் தாதி உத்தியோகத்தர்கள் இடமாற்றம் செய்யப்பட்டதாக அகில இலங்கை சுகாதார சேவை குற்றஞ்சாட்டியுள்ளது.
தாதி உத்தியோகத்தர்களின் பதவிகளுக்கான பிரச்சினை தொடர்பில் அதிகாரிகளுடன் தாம் கலந்துரையாடியதாகவும் ஆனால், அது தீர்க்கப்படவில்லையெனவும் அகில இலங்கை சுகாதார சேவையின் தலைவர் ஏ.ஜி.குமாரசிங்க தெரிவித்தார்.
'சட்டத்தின் பிரகாரம், நடவடிக்கை மேற்கொள்வதற்கு தொழிற்சங்கங்களுக்கு உரிமையுள்ளது. அத்துடன், சுமார் 25 தாதி உத்தியோகத்தர்கள் இடமாற்றம் செய்யப்பட்டால் குழுவொன்று கூட்டப்படவேண்டும்' என அவர் கூறினார்.
மேற்படி இடமாற்றங்கள் சட்டத்திற்கு மாறாக மேற்கொள்ளப்படும் பழிவாங்கல் நடவடிக்கை எனவும் ஆகையால் அவை வாபஸ் பெறப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
மேற்படி இடமாற்றம் வழங்கப்பட்டுள்ள தாதி உத்தியோகத்தர்கள் சட்டவிரோதமான செயற்பாடுகளில் ஈடுபடாத நிலையில், அவர்களது இடமாற்றத்தை உடனடியாக வாபஸ் பெற்றுக்கொள்ளுமாறு அரசாங்கத்திடம், கேட்டுக்கொண்டார்.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago