Menaka Mookandi / 2010 டிசெம்பர் 16 , மு.ப. 08:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் கடற்பயணத்தை மேற்கொள்வதற்கான கப்பல் சேவையொன்றை ஏற்படுத்துவதற்கான ஒப்பந்தமொன்று இரு நாடுகளுக்கிடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது என்று அரசாங்கம் இன்று அறிவித்தது.
அடுத்த ஆண்டு முதல் ஆரம்பிக்கப்படவுள்ள இந்த கப்பல் சேவைக்கான ஏற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் அதன் ஆரம்ப கட்டமாக தலைமன்னாருக்கும் ராமேஸ்வரத்துக்கும் இடையிலும் கொழும்புக்கும் தூத்துக்குடிக்கு இடையிலும் இந்த கப்பல் சேவை அமுல்படுத்தப்படவுள்ளது.
அத்துடன் எதிர்க்காலத்தில் ஏனைய துறைமுகங்களிலிருந்து இந்தியாவுக்கான கப்பல் சேவையை வழங்கவும் அரசாங்கம் நடவடிக்கை எக்கவுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான வர்த்தக சேவையினை முன்னெடுக்கும் வர்த்தகர்கள் மற்றும் உல்லாசப் பயணிகள், பக்தர்கள், மாணவர்கள் ஆகியோரின் நலன் கருதியே இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். (M.M)
3 hours ago
5 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
7 hours ago
8 hours ago