2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்நோக்கிய நாடுகளுக்கு கைகொடுக்க இலங்கை தயார்

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 16 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

விடுதலைப் புலிகள் இயக்கம் உட்பட பயங்கரவாத அச்சுறுத்தல்களை எதிர்நோக்கியுள்ள சர்வதேச நாடுகளை அவ்வச்சுறுத்தலில் இருந்து மீட்டெடுப்பதற்கு கைகொடுக்க இலங்கை எப்பொழுதும் தயாராகவே உள்ளது என்று அரசாங்கம் அறிவித்தது.

அத்துடன், சர்வதேச நாடுகள் இரட்டைப் போக்கு நிலையைக் கையாண்ட போதிலும் அவர்களின் குற்றச்சாட்டுக்களுக்கு எதிரான இலங்கையில் நிலைப்பாட்டை அரசாங்கம் தெளிவுபடுத்தி வருவதாக அமைச்சரவையின் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், "விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அச்சுறுத்தலுக்கு உள்ளான நாடுகளில் இந்தியா தற்போது இடம்பிடித்துள்ளது. இலங்கைக்கு மிக நெருங்கிய நாடு என்பதாலேயே அவ்வாறானதொரு அச்சுறுத்தலுக்கு இந்தியா முகங்கொடுத்துள்ளது.

பயங்கரவாதத்துக்கு எதிரானவர்கள் என்ற வகையிலும் தோழமை நாடு என்ற ரீதியிலும் எவ்வாறான இக்கட்டான சந்தர்ப்பங்களின் போதும் இந்தியாவுக்கு கைகொடுக்க இலங்கை தயாராக உள்ளது" என்றார். (M.M)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--