2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

இரு கண்துடைப்பு நாடகங்களை நடத்துபவர்கள் சந்திப்பதால் தீர்வு கிடைக்கப்போவதில்லை: சிவாஜிலிங்கம்

Super User   / 2010 டிசெம்பர் 19 , மு.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஐ.நா.வின் நிபுணர் குழுவும் இலங்கை அரசாங்கத்தின் நல்லிணக்க ஆணைக்குழுவும் கண்துடைப்பு நாடகங்களே. இக்கண்துடைப்பு  நாடகங்களை நடத்தும் இரு தரப்பினர் சந்திப்பதால் இறுதிப்போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தத் தீர்வோ இடம்பெற்ற கொலைகளுக்கு நீதியோ கிடைக்கப் போவதில்லை என தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

நல்லிணக்க ஆணைக்குழுவை இலங்கை விவகாரம் தொடர்பாக ஆலேசனை கூறுவதற்காக ஐ.நா. செயலாளர்நாயகத்தால் நியமிக்கப்பட்ட நிபுணர்குழு சந்திக்கவுள்ளமை குறித்து விடுத்த கருத்துத் தெரிவிக்கையிலேயே சிவாஜிலிங்கம் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:

"வன்னியில் நடைபெற்ற இறுதிப்போரின்போது பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்படக்கூடிய அபாயம் இருப்பதனால் பாதுகாப்பதற்கான உரிமை என்ற விசேட விடயத்தை பயன்படுத்தி ஐ.நா. சபை தலையிட்டு போரை நிறுத்த வேண்டும் என்று உலகெங்கிலுமுள்ள தமிழர்கள் போராடினர்.

அப்போது மௌனம் சாதித்த ஐ.நா.,  போரின் பின்னரும் இந்த மக்கள் 3 லட்சத்திற்கு மேற்பட்ட அவல வாழ்க்கைக்கு உருப்படியான வழிநடத்தைலையோ வழங்கத் தவறிய ஐ.நா., இன்றுவரை அரசாங்கத்தின் தடுப்புக் காவலிலுள்ளோரின்  பெயர் விபரங்களைக்கூட வெளியிடுமாறு நிர்ப்பந்திக்கத் தவறியுள்ளது.

ஜெனிவாவில் கூடிய மனித உரிமைக் ஆணைகுழுவில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென்ற சில நாடுகளின் கோரிக்கையைக்கூட ஐ.நா. பாதுகாப்புச் சபையில் வீட்டோ அதிகாரத்தை கொண்ட ரஷ்யா, சீனா மற்றும் நாடுகளின் உதவியுடன் ஏனைய நாடுகள் சேர்ந்து முறியடித்திருந்தன.

இந்தச் சூழ்நிலையில் வெறும் கண்துடைப்பாக ஒரு ஆலோசனைக் குழுவை ஐ.நா. மன்றத்தின் செயலாளர் நாயகம் நியமித்திருந்தார். இதைப்போல இலங்கை அரசாங்கமும் கற்றுக்கொண்ட பாடங்களும்  நல்லிணக்க ஆணைக்குழுவும் என்ற ஒரு கண்துடைப்பு நாடகத்தை அரங்கேற்றி வருகிறது.

இரு கண்துடைப்பு நாடகங்களையும் நடத்துவபவர்கள் சந்திப்பதன் மூலம் போரில்  கொல்லப்பட்ட, பாதிக்கப்பட்ட, இன்னமும் தடுப்பு முகாம்களிலும் சிறைகளிலும் வாடிக்கொண்டிருக்கக்கூடிய மக்களுக்கு எந்தவொரு தீர்வையோ அல்லது இந்த படுகொiலைக்கு எதுவிதமான நீதியும் கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை."
 


  Comments - 0

 • xlntgson Sunday, 19 December 2010 09:53 PM

  சிவாஜிலிங்கம், ஐ நாவையும் எதிர்த்து இந்தியாவையும் எதிர்த்து ரணில், மகிந்தவையும் எதிர்த்து நீங்கள் யாரைத்தான் நம்பப்போகின்றீர்கள்?
  நீங்களும் விமல் வீரவன்சவும் ஒரே மாதிரித்தான். மொழிதான் வேறு, தலை வீங்கின ஆட்கள்!
  தன் அளவு எவ்வளவு என்று அறியாதவர்கள்!
  போகிற போக்கில் பார்த்தால் இந்தியா, சீனா, பாகிஸ்தான் கூட ஒற்றுமையாகிவிடும் போல் தெரிகிறது நீங்கள் சிங்களவரோடு முகம் பார்க்க விரும்ப மாட்டீர்கள் என்று. அது போலவே சிங்கள-மட்டும் "அரசியலர்கள்", அரசியல்வாதிகள் மட்டும் என்று கூற முடியவில்லை துறவிகளும் இருப்பதால்

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--