Super User / 2010 டிசெம்பர் 20 , பி.ப. 12:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
(யொஹான் பெரேரா)
இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள ஐ.நா. நிபுணர் குழு, முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை சந்திப்பதற்கு அனுமதிக்கப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக்கட்சி கூறியுள்ளது.
'நாட்டிற்கும் பாதுகாப்புப் படையினருக்கும் பாதிப்பு ஏற்படாதவகையில் எந்தவொரு சர்வதேச விசாரணைக்குழுவுக்கும் முகம்கொடுக்கத் தயார் என சரத் பொன்சேகா ஏற்கெனவே தெரிவித்துள்ளார். எனவே அவரை ஐ.நா. நிபுணர் குழு சந்திப்பதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும்' என ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் தெரிவித்துள்ளார்.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் சாட்சியமளிப்பதற்காக ஐ.நா. நிபுணர் இலங்கைக்கு வரவுள்ளதாக அரசாங்கம் கூறுகின்ற போதிலும் நிபுணர் குழுவின் நோக்கம் இத்தகைய விசாரணைகளை மேற்கொள்வதாகவே இருக்கலாம் எனவும் லக்ஷ்மன் கிரியெல்ல கூறினார்.
'யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் என்ன நடந்தது என்பதை சரத் பொன்சேகா முழுமையாக அறிவார் என்பதால் அரசாங்கம் இவ்விடயத்தில் தெளிவான நிலைப்பாட்டை மேற்கொள்ள வேண்டும்.
இத்தகைய விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஐ.நா. நிபுணர்குழு இலங்கைக்கு வருவது அரசாங்கத்திற்கு பின்னடைவாகும்.
இக்குழுவுக்கு விஸா வழங்கப் போவதில்லை என அரசாங்கம் முன்னர் தெரிவி;த்திருந்த நிலiயில் இக்குழு இலங்கைக்கு விஜயம் செய்வதை அனுமதிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நிபுணர் குழு நியமனத்திற்கு எதிராக சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டதற்கு மத்தயில் இது நடைபெறுகிறது.
எந்தவொரு குற்றச்சாட்டு குறித்தும் சர்வதேச விசாரணைகள் எதற்கும் இடம்வைக்காமல் அரசாங்கம் விசாரணை நடத்த வேண்டும் என கரு ஜயசூரிய அண்மையில் சுட்டிக்காட்டிய நிலைமை இதுதான்' எனவும் லக்ஷ்மன் கிரியெல்ல கூறினார்.
23 minute ago
28 minute ago
45 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
28 minute ago
45 minute ago
51 minute ago