Super User / 2010 டிசெம்பர் 21 , மு.ப. 10:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைக்கு விசேட தூதுவர் ஒருவரை தான் அனுப்பவுள்ளதாக பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் வில்லியம் ஹேக் தெரிவித்துள்ளார்.
அத்துடன், அந்நாட்டு பாதுகாப்புச் செயலர் கலாநிதி லியாம் பொக்ஸ் இலங்கைக்கு விஜயம் செய்வதை பிரிட்டன் ஊக்குவிப்பதாகவும் வில்லியம் ஹேக் கூறியுள்ளார்
பிரிட்டனின் ஸ்கைநியூஸ் தொலைக்காட்சியின் நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டபோதே வில்லியம் ஹேக் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
லக்ஷ்மன் கதிர்காமர் ஞாபகார்த்த உரையாற்றுவதற்காக தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு கடந்த வாரம் இலங்கைக்கு அவர் விஜயம் செய்யவிருந்தார். எனினும் இவ்விஜயம் இறுதிநேரத்தில் இரத்துச் செய்யப்பட்டது. இதற்கு புலம்பெயர்ந்த தமிழர்களின் பிரித்தானிய அரசாங்கத்தின் அழுத்தங்களே காரணம் என கருதப்படுகிறது.
எனினும் தற்போது உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு லியாம்பொக்ஸ் இலங்கைக்கு வருவார் என பிரித்தானிய அரசாங்கம் கூறுகிறது.
"லியாம்பொக்ஸ் இலங்கைக்கு விஜயம் செய்யவேண்டும். ஏனெனில் இலங்கையின் அரசியல் தலைமைத்துவத்துடன் அவர் கொண்டுள்ள உறவு மிக உதவியாக அமையும்" என பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹேக் தெரிவித்துள்ளார்.
5 hours ago
03 Nov 2025
Saleem Tuesday, 21 December 2010 10:08 PM
இலங்கை விடயத்தில் இங்கிலாந்து எடுக்கும் கடும் நிலைப்பாடு இடம் பெயர்ந்த தமிழர்களின் அழுந்தங்க்களால் அன்று இலங்கை அரசாங்கத்தின் போக்கே காரணம். இலங்கை அரசு கடந்தகாலத்தில் பல குழுக்களை அமைத்து பிரபல்யமான படுகொலைகளை விசாரிப்பதாகவும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதாகவும் சொன்னதெல்லாம் காலம் கடத்தும் வித்தைகள் என்பதை இங்கிலாந்து தலைவர்கள் நன்கு அறிந்துகொண்டார்கள்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
03 Nov 2025