2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

கணித வினாத்தாளுக்கு விடையளிக்க மேலதிகமாக அரை மணித்தியாலம்

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 21 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கெலும் பண்டார)

இன்று நடைபெற்ற க.பொ.த. சாதாரண தர கணிதம் II வினாத்தாளுக்கு விடையளிக்க மேலதிகமாக அரை மணித்தியாலம் வழங்கப்பட்டது என கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இந்த வினாத்தாளுக்கு விடையளிப்பதற்கு இதுவரை காலமும் இரண்டு மணித்தியாலங்கள் மாத்திரமே ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் அக்காலப்பகுதி போதாதிருப்பதாக பல பாட நிபுணர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

இந்நிலையிலேயே இம்முறை இந்த அரை மணித்தியால மேலதிக நேரத்தை வழங்க தீர்மானிக்கப்பட்டதாக அமைச்சர் கூறினார். இதேவேளை, தேசிய கல்வி நிறுவகத்துக்கான புதிய பணிப்பாளர் சபையை இன்று நியமிக்கப்போவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--