Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Super User / 2011 ஜனவரி 10 , மு.ப. 09:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
சமாதான முயற்சிகளில் நோர்வேயின் பாத்திரம் தொடர்பாக மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) மேற்கொண்ட அசிங்கமான பிரசாரங்கள் குறித்து நோர்வே மிகவும் கவலைகொண்டிருந்தாக விக்கிலீக்ஸினால் வெளியிடப்பட்ட அமெரிக்காவின் இரகசிய கேபிள் தகவல் பரிமாற்ற ஆவணமொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஜே.பி.யை வழிக்குக் கொண்டு வருவதற்கு ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தயங்கியதால் நிலைமை எரிச்சலூட்டியதாகவும்; அப்போதைய நோர்வே தூதுவர் பிரட்ஸ்கர் தெரிவித்ததாக மேற்படி ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவுக்கு எதிரான நோர்வே எதிர்ப்பு பேச்சுகள் குறத்து தானும் ஒஸ்லோ அரசாங்கமும் கொண்டிருந்த கவலை அதிகரித்து வந்ததாக பிரட்ஸ்கர் தெரிவித்திருந்தாக அதில் கூறப்பட்டுள்ளது.
ஜே.வி.பியின் பிரசாரத்திற்கு பதிலளிப்பதற்கு இலங்கை அரசாங்கம் ஆர்வம் செலுத்தாமை குறித்து ஒஸ்லோ வெறுப்படைந்திருந்தது எனவும் விக்கிலீக்ஸினால் வெளியிடப்பட்ட ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
14 minute ago
15 minute ago