Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 ஜனவரி 10 , மு.ப. 10:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
(றிப்தி அலி)
வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து புத்தளத்தில் வாழும் முஸ்லிம்களின் வாக்காளர் பதிவு நடவடிக்கை தொடர்பாக பிரதி தேர்தல் ஆணையாளருடனான பேச்சுவார்த்தையையடுத்து விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் ஹசன் அலி தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகளுக்கும் பிரதி தேர்தல் ஆணையாளர் சுனந்த தேசபிரியவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று திங்கட்கிழமை தேர்தல் திணைக்களத்தில் இடம்பெற்றது.
வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து புத்தளத்தில் வாழும் முஸ்லிம்கள் அனைவரையும் தமது சொந்த இடங்களில் வாக்காளர்களாக பதிவதில் பல சிக்கல்கள் உண்டு. இதனால் குடும்ப தலைவர் மாத்திரம் தற்போது சொந்த இடங்களில் வாக்காளர்களாக பதிவு செய்வது என்று இன்றை பேச்சுவார்த்தையில் இணக்கம் காணப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
புத்தளம் பிரதேசத்தில் வட மாகாண முஸ்லிம்களுக்காக கொத்தணி வாக்குச்சாவடிகள் அமைப்பதை எதிர்வரும்; உள்ளூராட்சி மன்ற தேர்தலின் பின் நிறுத்துவது எனவும் இணக்கம் காணப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹசன் அலி தெரிவித்தார்.
மேலதிக தேர்தல் ஆணையாளர் சுனந்த தேசபிரியவுடனான இன்றைய சந்திப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் செயலாளர் ஹசன் அலி வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.பீ.பாரூக் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வன்னி மாவட்ட அரசியல் பீட உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். Pix By:Pradeep Pathiran
8 minute ago
15 minute ago
sham Wednesday, 12 January 2011 01:54 AM
இங்க மக்கள் மழையிலயும் வெள்ளதிளையும் சாப்பிட..படுக்க இடமில்லாம ...கஸ்டப்பர்ரஹ ...நீங்க அதுகள் ஒண்டும் தெரியாம ....திரிகிரிகலா சார் ...நானும் உங்களுக்கு வோட்டு போட்டவன்தான் சார் .....உங்க ஊர்லையே மக்கள் கஸ்டப்பர்ரஹ...நீங்க கட்சிய கபத்த பைதிங்கள சார்...முதல்ல ஊர் மக்களை பாருங்க ....
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
15 minute ago