2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

த.தே.கூட்டமைப்பு – த.க. அரங்க உபகுழுவின் முதலாவது சந்திப்பு

Super User   / 2011 ஜனவரி 12 , பி.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர்.சுகந்தினி)

இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டம் குறித்து ஆராய்வதற்காக தமிழ் கட்சிகளின் அரங்கமும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் நியமித்த உபகுழுவின் முதலாவது கூட்டம் இன்று புதன்கிழமை நடைபெற்றது.

பம்பலப்பிட்டியிலுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில்  த.தே.கூ. சார்பில் மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர். தமிழ்க்கட்சிகளின் அரங்கத்தின் சார்பில்  த.சித்தார்த்தன்,  எம்.கே. சிவாஜிலிங்கம், அ.இராசமாணிக்கம், ஆகியோர் கலந்துகொண்டனர்.

இனப்பிரச்சினைக்கு பொதுவான தீர்வுயோசனை தயாரிப்பது தொடர்பாக இக்கூட்டத்தில் பேசப்பட்டதாக  தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்தை குறித்தும் இன்றைய கூட்டத்தில் ஆராயப்பட்டதாகவும் அவர் கூறினார்.  உபகுழுவின் இரண்டாவது கூட்டத்தை பெப்ரவரி 9 ஆம் திகதி நடத்தவும் தீர்மானிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--