2020 ஒக்டோபர் 23, வெள்ளிக்கிழமை

கொழும்பில் புதிய நீல, ஊதா நிற பஸ்கள்

Kogilavani   / 2011 ஜனவரி 13 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஒலிந்தி ஜயசுந்தர)

இலங்கை போக்குவரத்து சபை கொழும்பு நகரில் 6 ஊதா நிற பஸ்களையும் 6 நீல நிற பஸ்களையும்,  வெவ்வேறான இரண்டு புதிய பாதைகளில் அடுத்த மாதம் முதல் சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு இன்று தெரிவித்துள்ளது.

இந்த பஸ்சேவைகள் வட்டப் பாதையில் ஓடும், கட்டணம் தூரத்தை பொறுத்து 6, 9,10 ரூபாவாக இருக்கும் என பிரதி போக்குவரத்து அமைச்சர் ரோகன திஸாநாயக்க கூறினார்.

6 பஸ்கள் கோட்டையிலிருந்து ஆரம்பித்து ஆமர்வீதி, பாணந்துரை,  புதிய களனி பாலம்,  தெமட்டகொடை,  பொரளை ஆகிய இடங்களூடாக சென்று மீண்டும் கோட்டையை வந்தடையும். இந்த பஸ்கள் ஊதா நிறமாக இருக்கும்.

வேறு ஆறு பஸ்கள், கோட்டை, பௌத்தாலோக மாவத்தை, பம்பலப்பிட்டி, பின் மீண்டும் கோட்டை எனப் பயணிக்கும். இவை நீல நிறமாக இருக்கும்.

இந்த சேவைகள் பஸ் பயணிகளுக்கு மிகவும் பயனுடையதாக இருக்கும் என பிரதி போக்குவரத்து அமைச்சர் ரோகன திஸாநாயக்க கூறினார். பரிசோதனை அடிப்படையில் இந்த பஸ்சேவையை நடத்திப்பார்த்தப்போது ஒரு கிலோமீற்றருக்கு 48 ரூபா வருமானம் கிடைத்தது. இந்த பஸ்சேவையால் பெரிய இலாபம் கிடைக்காது விட்டாலும்,  நட்டம் ஏற்பட இடமில்லை,  என போக்குவரத்து அமைச்சின் அதிகாரி ஒருவர் கூறினார். ஏனைய வழமையான பஸ்களால் ஒரு கிலோ மீற்றருக்கு 50 ரூபாவரை கிடைக்கின்றது.

தனியார் பஸ் உரிமையாளர்கள்,  மேல் மாகாணத்தில் பஸ்களை அதிகரிப்பதால் வாகன நெருக்கடி ஏற்படும் எனவும், புதிய நேர அட்டவணை தயாரிப்பதை குழப்பும் எனவும் கூறுகின்றனர். ஆனால் இந்த புதிய பஸ்சேவை மக்களுக்கு வசதியாக இருக்கும் எனவும் இந்த சேவை பெரியளவில் பலனளிக்காது விடின்,  இரத்துச் செய்யப்படும் எனவும் அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.
 


  Comments - 0

  • siddeek Friday, 14 January 2011 08:13 PM

    முன்னேற விட மாடானுவல்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--