Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 ஜனவரி 14 , மு.ப. 08:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாக கூறப்படுவதை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிராகரித்துள்ள அதேவேளை இச்சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்துமாறு கடற்படையினருக்கு அவர் உத்தரவிட்டுள்ளதாக இந்தியாவின் 'இந்து' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
ஆலரிமாளிகையில் இன்று நடைபெற்ற வெளிநாட்டு ஊடகவியலாளர்களுடனான காலை உணவு விருந்துபசாரத்தின்போது ஜனாதிபதி கருத்துத் தெரிவிக்கையில் இலங்கைக் கடற்படையினர் இச்சம்பவத்தில் சம்பந்தப்படவில்லை எனக் கூறியுள்ளார்.
இச்சம்பவம் குறித்து இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உரையாடினாரா என கேட்டபோது இல்லை என ஜனாதிபதி பதிலளித்தார்.
இலங்கைப் படைகள் சம்பந்தப்பட்டிருந்தால் இலங்கை அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளுமா எனக் கேட்டபோது, இலங்கைக் கடற்படையினர் சம்பந்தப்படவில்லை என ஆரம்ப விசாரணைகள் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் ஆனால் முழுமையான விசாரணை நடத்துமாறு கடற்படைத் தளபதிக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி கூறினார்.
இலங்கைக் கடற்படையின் நடவடிக்கைப் பிரிவு தலைமை அதிகாரி இது தொடர்பாக கூறுகையில் , இச்சம்பவம் இந்திய கடற்பரப்பில் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தார். 'அக்கடல் பகுதி ஆழமில்லாதது. எமது அனைத்து கப்பல்களின் நிலைகளும் தரையிலுள்ள கருவிகள் மூலம் கண்காணிக்கப்படுகின்றன. இதை யாரும் சோதனையிடலாம் எனத் தெரிவித்தார்.
8 minute ago
12 minute ago
16 minute ago
1 hours ago
akram raza Sunday, 16 January 2011 06:04 AM
எமது ஜனாதிபதி சொன்னா சொன்னதுதான் அவர் ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
12 minute ago
16 minute ago
1 hours ago