Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Super User / 2011 ஜனவரி 17 , பி.ப. 03:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த வருடம் இலங்கையில் நடைபெற்ற சர்வதேச இந்திய திரைப்பட அகடமியின் (ஐஃபா) விருது வழங்கல் விழாவில் தான் பங்குபற்றாமைக்கு விழா ஏற்பாட்டாளர்களே காரணம் என பொலிவூட் சுப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் இன்று தெரிவித்துள்ளார்.
அதேவேளை இவ்வருடம் கனடாவின் டொரன்டோ நகரில் நடைபெறவுள்ள ஐஃபா விழாவிலும் தான் பங்குபற்ற போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
ஐஃபா தூதுவராக விளங்கிய அமிதாப், 2000 ஆம் ஆண்டு இவ்விழா ஆரம்பித்தலிருந்து அனைத்து வருடங்களிலும் அதில் பங்குபற்றியிருந்தார். ஆனால் கடந்த ஜூன் மாதம் கொழும்பில் நடைபெற்ற ஐஃபா விழாவை புறக்கணிக்குமாறு தென்னிந்திய திரைப்படத் துறையினர் கோரியிருந்த நிலையில் அமிதாப் அவ் விழாவில் அமிதாப் பங்குபற்றவில்லை. அதற்கு அவரின் மகன் அபிஷேக் பச்சனும் மருமகள் ஐஸ்வர்யா ராயும் நடித்த ராவணன் படமே காரணமாக இருக்கலாம் என ஊகங்கள் வெளியானமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் 'நான் டொரன்டோவுக்கு வரப்போவதில்லை. எனது சேவை தேவையில்லை என ஐஃபா கூறுகிறது' என டுவிட்டர் இணையத்தள குறிப்;பொன்றில் அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார்.
டொரன்டோவிலுள்ள ரசிகர்களை ஏன் புறக்கணிக்கிறீர்கள் எனக் கேட்டபோது 'நானல்ல, விழா ஏற்பாட்டாளர்கள் தான் நான் டொரன்டோ வருவதை விரும்பவில்லை. இலங்கையிலும் அப்படித்தான் என அமிதாப் பதிலளித்துள்ளார்.
இதேவேளை ஐஃபா பேச்சாளர் சபாஸ் ஜோசப் இன்றுமாலை இது தொடர்பாக பதிலளித்துள்ளார்.
கடந்த வருடம் இலங்கையில் நடைபெற்ற ஐஃபா விழாவில் விளக்க முடியாத காரணங்களால் அமிதாப் பங்குபற்றவில்லை எனவும் இவ்வருடம் அமிதாப் பங்குபற்றாதிருப்பதற்கு காரணம் அவருக்கே தெரியும் எனவும் சபாஸ் ஜோசப் தெரிவித்துள்ளார்.
ஐஃபாவையும் அமிதாப்;பையும் பிரிக்க முடியாது. இவ்வருடமும் அவரை பங்குபற்றச் செய்வதற்காக நாம் பின்தொடர்ந்து செல்வோம் என சபாஸ் ஜோஸப் மேலும் தெரிவித்துள்ளர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
53 minute ago
1 hours ago
2 hours ago