2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

சீனப் பிரஜைகள் இருவர் விமான நிலையத்தில் கைது

Super User   / 2011 ஜனவரி 18 , மு.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 (காந்த்ய சேனாநாயக்க, சுபுன் டயஸ்)

90 லட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களை கடத்த முயற்சித்த சீனப் பிரஜைகள் இருவரை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் இன்று கைது செய்துள்ளனர்.

இச்சந்தேக நபர்கள் இருவரை ஹொங்கொங் செல்லும் விமானத்தின் மூலம் சீனாவுக்குச் செல்லவிருந்ததாக சுங்கப் பணிப்பாளர் பராக்கிரம பஸ்நாயக்க தெரிவித்தார்.

பயணப் பொதிகளுக்குள் அமெரிக்க டொலர், சீன யுவான், மற்றும் ஏனைய நாடுகளின் நாணயங்கள் பணம் மறைத்து வைக்கப்பட்டிருந்தாகவும் அவற்றின் பெறுமதி 9 மில்லியன் ரூபா எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதுதொடர்பாக பண்டாரநாயக்க விமான நிலையத்திலுள்ள சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .