Super User / 2011 ஜனவரி 21 , பி.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஒலிந்தி ஜயசுந்தர)
தேர்தல் காலங்களில் சுவரொட்டி மற்றும் பதாகை போன்ற சட்டவிரோத பிரச்சார நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கு எதிராக பொலிஸாரால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் பேச்சாளர் பிரசாந்த ஜெயகொடி தெரிவித்தார்.
பல மாவட்டங்களில் வேட்பாளர்கள் ஏற்கனவே சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர் எனவும் இதனை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பொது இடங்களில் சுவரொட்டிகளை ஒட்டுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சுவரொட்டிகளை அகற்றுவதற்கு தேவையான ஊழியர்கள் இல்லமையினால் பொலிஸாரே அகற்றி வருவதாக பொலிஸ் பேச்சாளார் பிரசாந்த ஜெயகொடி மேலும் குறிப்பிட்டார்.
இதேவேளை, மார்ச் மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் 15,000 வேட்டாளர்கள் பங்குபற்றுவார்கள் என எதிர்பார்ப்பதாக தேர்தல் கண்காணிப்பு நிறுவனமான பவ்ரல் அமைப்பின் நிறைவேற்று அதிகாரி ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
13 minute ago
27 minute ago
52 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
27 minute ago
52 minute ago
1 hours ago