2026 ஜனவரி 27, செவ்வாய்க்கிழமை

மாணவனை காணவில்லை ; சைக்கிளுடன் புத்தகப்பை மீட்பு

Janu   / 2026 ஜனவரி 27 , பி.ப. 01:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை நீதிமன்ற வீதியைச் சேர்ந்த 17 வயதுடைய எம்.எல்.எம்.எம். முன்சித் என்ற பாடசாலை மாணவன் திங்கட்கிழமை (26) காலை முதல் காணாமல் போயுள்ளார்.

இது தொடர்பாக பெற்றோரால் திருகோணமலை துறைமுக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருகோணமலையில் பிரபல வழக்கறிஞர் ஒருவரின் மகனான குறித்த  மாணவன் திங்கட்கிழமை (26) காலை வீட்டில் இருந்து பாடசாலைக்கு செல்வதாக கூறி விட்டு வெளியேறியுள்ளார்.  

அவர்  திருகோணமலையில் உள்ள பிரபல ஆண்கள் பாடசாலையொன்றில் கல்வி கற்கும்  மாணவராவார். சம்பவ தினத்தன்று  பாடசாலையில் நடைபெற்ற பரீட்சைக்கு மாணவன் சமூகமளிக்காததால் இது குறித்து விசாரித்த பின்னர் பாடசாலை நிர்வாகம் பெற்றோருக்கு தகவல் அளித்துள்ளனர்.

மெக்கேஷியர் மைதானத்திற்கு எதிர்புறம் உள்ள சமுத்திரகம கரையோரமாக  உள்ள பற்றைக் காட்டில் குறித்த மாணவனின் சைக்கிள் மற்றும் புத்தகங்களுடன் கூடிய பாடசாலைப்பை  பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பான விசாரணைகளை துறைமுக பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்

எஸ்.கீதபொன்கலன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X