2026 ஜனவரி 27, செவ்வாய்க்கிழமை

ஜனாதிபதி செயலகம் முன் பதற்றம்

Janu   / 2026 ஜனவரி 27 , பி.ப. 02:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி செயலகம் முன் பதற்றமான நிலை காணப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

பாடசாலை மேம்பாட்டு அதிகாரிகள் சங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட தொடர்ச்சியான உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று செவ்வாய்க்கிழமை (27)  நிறுத்துவதற்கு பொலிஸார்  ஜனாதிபதி செயலகத்திற்கு வெளியே சென்றதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சங்கத்தின் பல அதிகாரிகள் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், ஏனைய உறுப்பினர்கள் அந்த இடத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அறிக்கைகளின்படி, உண்ணாவிரதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருமாறு கோரிய பொலிஸாரின்  அறிவிப்பையடுத்து, போராட்டக்காரர்களுக்கும் சட்ட அமுலாக்க அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஊடகங்களுக்குப் பேசிய ஒரு போராட்டக்காரர், தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக பிரதமர் மற்றும் தொடர்புடைய அதிகாரிகளுடன் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாகவும், ஆனால், இதுவரை எந்த பதிலும் அல்லது தீர்வும் கிடைக்கவில்லை என்றும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X