2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

தமிழக சட்டத்தரணி கைதான செய்திக்கு இராணுவம் மறுப்பு

Super User   / 2011 ஜனவரி 21 , பி.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சுபுன் டயஸ்)

சென்னையைத் தளமாகக் கொண்ட சட்டத்தரணியொருவரையும் அவரின் உறவினரையும் இலங்கை இராணுவம் தடுத்து வைத்துள்ளதாக  இந்திய ஊடகங்களில் வெளியான செய்திகளை இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெதவல நிராகரித்துள்ளார்.

சட்டத்தரணியான அங்கயற்கண்ணியும் அவரின் உறவினரான திருமலையும்  இலங்கைத் திழ் அகதிகளின் நிலைமையை பார்வையிடுவதற்காக இலங்கைக்கு வந்ததாகவும் தற்போது அவர்கள் குறித்த விபரங்கள் தெரியவில்லை எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இது இராணுவப் பேச்சாளர் என மேஜர் ஜெனரல் மெதவலவிடம் கேட்டபோது, "இவர்கள் குறித்த விபர்கள் எதுவும் எமக்குத் தெரியாது. இத்தகைய சம்பவம் குறித்து எமக்கு அறிவிக்கப்படவுமில்லை" என அவர் கூறினார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--